Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வத்திராயிருப்பு அருகே தனியார் மதுபான கடையில் குண்டு வீசிய 2 பேர் கைது

வத்திராயிருப்பு, மே 20: வத்திராயிருப்பு அருகே தனியார் மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டியில் இருந்து நெடுங்குளம் செல்லும் சாலையில் தனியார் மதுபான கடை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை திறந்து மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. அப்போது கூமாபட்டியை சேர்ந்த ரமணி(42), ராஜா(41), வீரையா ஆகியோர் மதுபோதையில் கடைக்கு வந்தனர். மூவரும் சேர்ந்து, ‘‘கடையை ஏன் லேட்டாக திறந்தீர்கள்?’’ என ஊழியர்களிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு காசு கொடுக்காமல் சென்றனர். பணம் கேட்டதால் கடை ஊழியர்களுக்கும், இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரமணி, ராஜா, வீரையா ஆகியோர் திடீரென கடையின் வெளிச்சுவர் மற்றும் உள்சுவற்றில் அடுத்தடுத்து 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் கடையில் கடை ஊழியர் மாயன்(34) காயமடைந்தார்.