Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டூவீலர் மீது கார் மோதி சிவகாசி மாநகராட்சி பொறியாளர் பலி

திருமங்கலம், ஜூன் 18: திருமங்கலம் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில், சிவகாசி மாநகராட்சி இளநிலை பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை, வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜாகீர்உசேன்(57). இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தினந்தோறும் மதுரையிலிருந்து சிவகாசிக்கு டூவீலரில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இதன்படி நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் சிவகாசிக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். வழியில் திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கரிசல்பட்டி அருகே சென்ற போது, பின்னால் அதிவேகமாக வந்த கார் அவரது டூவீலர் மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட ஜாகீர்உசேன் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜாகீர்உசேன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அவரது மகள் நஸ்ரின் சையதுஅலி பாத்திமா கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.