வில்லிபுத்தூர், மே 18: வில்லிபுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் சரவணன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவ, மாணவியர் சேர்க்கைக்காக (www.tngasa.in) என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம். இக்கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ.ஆங்கிலம், பி.எஸ்.சி.கணிதம், பி.எஸ்.சி.கணிதவியல் மற்றும் பி.காம். வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.
கல்லூரியின் குறியீட்டு எண் : 1041026. மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க கல்லூரி அலுவலகத்தில் \”மாணவர் உதவி மையம்\” செயல்பட்டு வருகிறது. மேலும் மாணவ, மாணவியர் தங்கி பயில்வதற்கு தனித்தனியாக அருகில் சமூக நீதி விடுதி உள்ளது. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மே 29 இறுதி நாளாகும். எனவே, பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற மாணவ, மாணவியர் விண்ணப்பம் செய்யுமாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
