Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விருதுநகர் மாவட்ட பகுதிகளில் உள்ள பாரபட்சமாக நடத்தப்படும் ஆய்வுகள்

சிவகாசி, ஆக 10: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் பாரபட்சமாக நடத்தப்படும் ஆய்வுகளினால், உரிமையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் பூட்டிக்கிடப்பதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலாக பட்டாசு தயாரிக்கும் தொழில் விளங்கி வருகிறது. இங்கு சுமார் 1070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை தருவதுடன், இந்திய அளவில் வர்த்தகத்திலும் சிவகாசி பட்டாசு தொழில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆனாலும், இங்கு அடிக்கடி ஏற்படும் வெடி விபத்துக்களால், தொழிலாளர்கள் உயிரிழக்கும் நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் கடந்த மாதம் 26ம் தேதி சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சட்ட விரோதமாக குடோன் அமைத்து பட்டாசு தயாரித்த இடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த வெடி விபத்தை தொடர்ந்து சிவகாசி உள்ளிட்ட விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு மற்றும் பதுக்கல் தொடர்பாக காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு