Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அருப்புக்கோட்டை நகரில் சாலையில் வாகன பார்க்கிங்

அருப்புக்கோட்டை, ஜூலை 9: அருப்புக்கோட்டை நகர் பகுதியில் ரோட்டின் ஓரத்தில் டூவீலர்கள், கார்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சிரமப்படுவதோடு விபத்தும் ஏற்படுகிறது. அருப்புக்கோட்டையில் கடைகள் பெரும்பாலும் போக்குவரத்து நிறைந்த மெயின்ரோட்டின் அருகில்தான் உள்ளன. நகரின் பஜார் பகுதிகளில் அதிகளவில் கடைகள் அமைந்திருக்கும். பல்வேறு தேவைகளுக்காக மக்கள் டூவீலர், கார்களில் தான் அதிகளவில் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் போக்குவரத்து நிறைந்த ரோட்டிலும், அதன் அருகிலும் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் ரோட்டில் செல்லும் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் பெரிதும் சிரமப்படுகின்றன. மேலும் நடந்து மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.