Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூ. கட்சி நடைபயணம்

வத்திராயிருப்பு, ஆக. 8: வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணம் துவங்கப்பட்டது. இந்த நடைபயணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மூர்த்தி துவக்கி வைத்தார். இதில், விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட வேண்டும். வருசநாடு மலை பாதை திட்டம் அமல்படுத்திட வேண்டும். பட்டாசு தொழிலுக்கு செல்பவர்கள் உயிரை பாதுகாக்க வேண்டும். வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை கட்டிட வசதிகளை மேம்படுத்திட வேண்டும்.

வத்திராயிருப்பு தாலுகாவை வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். கண்மாய்களின் மண் அல்ல அனுமதி வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்திட வேண்டும். சதுரகிரி கோயிலை சுற்றுலா தளமாக்கி ரோப்கார் வசதி செய்திட வேண்டும். கைத்தறி பெடல் தறி தொழில் பாதுகாத்து நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரிசாமி, மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தாலுகா செயலாளர் கோவிந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.