Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் உலா

வத்திராயிருப்பு, ஆக. 5: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் யானை, மான், காட்டுப்பன்றி,மிலா உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் இரை, தண்ணீர் தேடி மலையடிவாரத்திலுள்ள விளைநிலங்களுக்கு வருவது வழக்கம். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. மேலும் புற்கள் கருகியுள்ளன.

இதனால், இரை மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு இறங்கக்கூடிய வனவிலங்குகள் அடிவார பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வனப்பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டுமே வனத்துறையினர் தொட்டி கட்டி வனவிலங்குகளுக்கு தண்ணீர் வழங்கி வருகின்றனர்.  இவைகள் போதுமானதாக இல்லை. எனவே கூடுதல் இடங்களில் தொட்டி கட்டி வனவிலங்குகளுக்கு தண்ணீர் வசதி செய்ய வேண்டும். என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.