Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பயறுவகைப் பயிர்களில் அதிக மகசூல் பெற இலை வழித் தெளிப்பு கரைசல்; வேளாண் அதிகாரிகள் தகவல்பயறுவகைப் பயிர்களில் அதிக மகசூல் பெற இலை வழித் தெளிப்பு கரைசல்; வேளாண் அதிகாரிகள் தகவல்

ஏழாயிரம்பண்ணை, நவ. 2: பயறுவகைப் பயிர்களில் அதிக மகசூல் பெற இலைவழித் தெளிப்பு கரைசல் குறித்து வேளாண் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: மண்ணில் இருந்து மணிச்சத்து பயிர்களுக்கு கிடைப்பதைவிட இலைவழியாக தெளித்தால் எளிதாக பயிர்கள் கிரகித்து புரதச்சத்தின் மாற்றத்தை அதிகப்படுத்தும். பூக்கள் பூத்த பின் இலைகளில் உற்பத்தியாகும் மாவுச்சத்தை விதையில் சேமிக்க ஏதுவாக இலைகள் பச்சையாக இருக்க தேவைப்படும் தழைச்சத்தும் டிஏபி கரைசலில் உள்ளது.

பயறுவகைப் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 2 சதவீதம் டிஏபி கரைசல் தயாரிக்க 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இரவு நேரத்தில் 4 முறை இந்த கரைசலை நன்றாக கலக்க வேண்டும். மறுநாள் காலையில் தெளிந்த நீரை வெள்ளைத் துணியால் வடிகட்டி, அந்த நீருடன் 190 லிட்டர் தண்ணீர் கலந்து காலை மற்றும் மாலை நேரங்களில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

இந்த கரைசலை பயறுவகைப் பயிர்களில், விதைத்த 30வது நாள் மற்றும் 45வது நாள் என இருமுறை தெளிக்கலாம். (அல்லது) பூக்கும் தருணத்தில் ஒரு முறையும் 15வது நாள் கழித்து ஒருமுறையும் தெளிக்கலாம். டிஏபி கரைசல் தெளிப்பதால், பூக்கள் கொட்டாமல் காய்களில் மணி (பருப்பு) திரட்சியாக இருக்கும். காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், மகசூல் வழக்கத்தை விட 20 சதவீதம் உயரும். இந்த வழிமுறையில் செலவு குறைவு, வரவு அதிகம் என்பதை விவசாயிகள் அறிய வேண்டும்.

உளுந்து மற்றும் பச்சைப்பயிரில் மகசூலை அதிகரிக்க 2 கிலோ யூரியாவை 200 லிட்டர் நீரில் கரைத்து (1 சதவீதம் கரைசல்) ஒரு ஏக்கருக்கு இலைவழியாகத் தெளிக்கலாம். இந்த கரைசலை பூக்கும் தருணத்தில் ஒருமுறையும் 15 நாட்கள் கழித்து ஒருமுறையும் தெளிக்கலாம். இதுபோன்ற வழிமுறை மேற்கொள்வதால், பூக்கள் உதிர்வது குறைந்து, பயறு விளைச்சல் 20 சதம் வரை அதிகரிக்கும். மேலும் வறட்சியைத் தாங்கும் திறன் செடிகளுக்கு உயரும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.