Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சாலையில் செல்லும் வாகனங்கள் பாதுகாப்பு விதிகளை மீறினால் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை; அதிகாரிகள் எச்சரிக்கை

விருதுநகர்: பொதுமக்களின் பாதுகாப்பினை முதன்மைப்படுத்தும் வகையில், சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, தலைக்கவசம் அணியாமல் டூவீலர் இயக்கும் ஓட்டுநர்களின், ஓட்டுநர் உரிமத்தின் மீது மூன்று மாத தற்காலிக தடையுடன் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மது குடித்து விட்டு வாகனத்தினை இயக்குதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தினை இயக்குதல், செல்போன் பயன்படுத்தி கொண்டே வாகனத்தினை இயக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களின் ஓட்டுநர் உரிமங்களின் மீது தற்காலிக தடை நடவடிக்கை செய்யப்படுவதுடன், அசல் ஓட்டுநர் உரிமமும் பறிமுதல் செய்யப்படும்.

ஆட்டோ வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு மேல் கூடுதலாக நபர்களை ஏற்றக்கூடாது. தவறும் பட்சத்தில், வாகனம் சிறைபிடிக்கப்பட்டு, அனுமதிச் சீட்டும் ரத்து செய்யப்படும். மினி பஸ்கள் மற்றும் பஸ்கள் இயக்குபவர்கள் தங்களது வாகனங்களின் படிகளில் பொதுமக்கள், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ. மாணவிகள் பயணம் செய்வதை அனுமதிக்கக்கூடாது. தவறும் பட்சத்தில், பஸ்சின் முதன்மை அனுமதிச் சீட்டின் மீது தற்காலிக தடை நடவடிக்கை மேற்க்கொள்வதுடன் வாகனமும் சிறைபிக்கப்படும்.

பள்ளி வாகனங்களின் ஓட்டுனர்கள் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவிலேயே தங்கள் வாகனங்களை இயக்க வேண்டும். அதிவேகமாக இயக்கும் ஓட்டுநர்களது ஓட்டுநர் உரிமம் தற்காலிக தடை செய்யப்படுவதுடன், பள்ளி வாகனத்தின் அனுமதிச் சீட்டும் ரத்து செய்யப்பட்டு, வாகனம் சிறை பிடிக்கப்படும். இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.