Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வத்திராயிருப்பில் ஒரு மணிநேரம் வெளுத்து வாங்கிய கனமழை

வத்திராயிருப்பு, அக்.2: வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வத்திராயிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலையில் திடீரென கருமேகம் சூழ்ந்தது. வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூமாபட்டி, கான்சாபுரம், தம்பிபட்டி, மகாராஜபுரம், அத்திகோயில் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.