Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அரசால் தடை விதிக்கப்பட்ட பாலித்தீன் பயன்பாடு அதிகரிப்பு

விருதுநகர், ஆக.1: கடைகளில் பாலித்தீன் பைகள் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வாலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பாலித்தீன் பைகளின் புழக்கத்தை கட்டுப்படுத்த கடந்த திமுக அரசு மஞ்சள் பை திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படாமல் முடங்கி உள்ளதால் மீண்டும் பாலித்தீன் பை புழக்கம் அதிகரித்துள்ளது என சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் முருகேசன் கூறுகையில், ஒருமுறையே பயன்படுத்தி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது கடினம். இவை மழைநீரை நிலத்திற்குள் செல்ல விடாமல் நிலத்தடி நீரை பெருக விடாமல் தடுக்கும். மக்கும் தன்மையற்ற பாலித்தீன் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டும், சுகாதாரத்தினை பாதுகாக்கவும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.