Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாசுதேவநல்லூர் அருகே வேலாயுதபுரம் திருச்சிலுவை ஆலயத்தில் மகிமை பெருவிழா

வாசுதேவநல்லூர், செப்.29: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே வேலாயுதபுரத்தில் உள்ள லொயோலா எல்சியத்தில் திருச்சிலுவை மகிமைபெருவிழா, வியாகுல அன்னை பெருவிழா நடைபெற்றது. விழாவில் மதுரை உயர்மறைமாவட்ட பேராயர் எஸ்.அந்தோணிசாமி கலந்து கொண்டு பெருவிழா திருப்பலி ஆற்றினார். இந்த ஆலயத்தில் இந்தியாவிலேயே உயரமான திருச்சிலுவை சுமந்த ஆண்டவர் சுரூபம் உள்ளது.

திருவிழாவிற்கு வந்த மறை மாவட்ட மக்கள் உயிர்பிரிந்த ஆண்டவரை இடது தொடையயில் மரியன்னை வைத்துள்ள சுரூபத்தை ஆச்சரியமாக பார்த்து சென்றனர். திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு திருச்சிலுவை கொடியுடன் பேராயர் அந்தோனிசாமி, இயேசுவான் திருப்பாடுகளின் ஆலயத்திற்கு அழைத்து சென்றனர். திருச்சிலுவை சுமந்த ஆண்டவர் மற்றும் கிறிஸ்து அரசர் ரதத்தை அர்ச்சித்தவுடன் திருச்சிலுவை ஆலயத்தை நோக்கி தேர் பவனி நடைபெற்றது.

மாலை 7 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் பேராயருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. இரவு 7.10 மணிக்கு பேராயர் மற்றும் அருட்தந்தையர்களுக்கு சிறிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு 7.30 மணிக்கு பெருவிழா திருப்பலி மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெற்றது. இவ்விழா திருப்பலியில் பேராயரோடு இணைந்து பாளையங்கோட்டை மறைமாவட்ட அருட்தந்தையர்கள், பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி அருட்தந்தையர்கள், தொன் போஸ்கோ அருட்தந்தையர்கள், கார்மல் சபை அருட்தந்தையர்கள் என 30க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளும் கலந்து கொண்டனர்.

விழாவில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, யூனியன் சேர்மன் பொன். முத்தையா பாண்டியன், கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரம் உள்பட 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழா முடிவில் அசன உணவும் அதனைத் தொடர்ந்து வாணவேடிக்கையும் நடைபெற்றது. ஏற்பாடுகளை வேலாயுதபுரம் பங்குத்தந்தை வ.எட்வின் ஆரோக்கியநாதன், பாளையங்கோட்டை லொயோலா பப்ளிகேசன் நிறுவனரும், வேலாயுதபுரம் திருச்சிலுவை ஆலய நிர்வாகியுமான இ.பெர்க்மான்ஸ் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.