Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க வேண்டும்: ரயில் பயனாளர் சங்கம் கோரிக்கை

ராஜபாளையம், செப்.29: ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்க 5ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது.சங்க தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வைத்து பேசினார். செயலாளர் விஜய் ஆண்டறிக்கை வாசித்தார்.பொருளாளர் ஜெகத் சங்கர் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். இணை செயலாளர் ஹரிசங்கர் சங்க செயல்பாடுகள் மற்றும் சங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஜெயபால், கருப்பையா ஆகியோரின் 30 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை பாராட்டி நினைவு கேடயம் வழங்கி, சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.ரயில்வே அமைச்சக ஆலோசனைக் குழு உறுப்பினர் மான் ராமச்சந்திர ராஜா சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், ராஜபாளையம் ரயில் வழித்தட நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், ராஜபாளையம் ரயில் நிலையத்தை இடைநிலை இயக்க முனையமாக தரம் உயர்த்த வேண்டும். முதல் நடைமேடை முழுவதும் நிழற்குடை அமைக்க வேண்டும்.

ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை விரைவில் துவக்க வேண்டும். ராஜபாளையம் ரயில் நிலைய அம்ரித் பாரத் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். சிலம்பு விரைவு வண்டியை(20681/82) தினசரி இயக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் துணைத்தலைவர் ஜெகந்நாத ராஜா நன்றி கூறினார்.