ஏழாயிரம்பண்ணை, செப். 28: ஏழாயிரம்பண்ணை சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது, இதயைடுத்து ஏழாயிரம்பண்ணை இன்ஸ்பெக்டர் குமாரி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஏழாயிரம்பண்ணை அருகே வல்லம்பட்டி கீழத்தெரு பகுதியில் உள்ள மகாலட்சுமி (37) என்பவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது அங்கு மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த 33 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் விற்பனையில் ஈடுபட்ட மகாலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

