Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குண்டாசில் வாலிபர் கைது

சிவகாசி, செப். 28: சிவகாசி சுந்தரம் தெருவை சேர்ந்தவர் முத்துகுரு மகன் பரத் என்கிற மெய்யண்ணன் (23). இவரும் இவரது நண்பர்கள் சுந்தரேசன், கார்த்திசெல்வம் ஆகியோர் கடந்த மாதம் 27ம் தேதி சிவகாசி மாரியம்மன் கோவில் அருகில் ஒரு மது பாரில் மது அருந்த வந்த சந்தனமணி (50) என்பவரிடம் தகராறு செய்து அவரை பீர் பாட்டிலால் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பரத் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். இந்த நிலையில் வாலிபர் பரத்தின் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி கவுதம் கோயல் மாவட்ட கலெக்டர் சரண்யா அறிக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்று வாலிபர் பரத்தை குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் வாலிபர் பரத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.