Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

சிவகாசி, ஜூலை 23: சிவகாசி பகுதியில் சரக்கு வாகனங்கள் சாலை விதியை மீறி, அளவுக்கு அதிகமாக பாரத்தை ஏற்றிக் கொண்டு செல்வது அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதோடு விபத்து அபாயமும் நீடித்து வருகிறது. குறிப்பாக, சிவகாசி பகுதியில் பழைய பேப்பர் லோடுகள், தீப்பெட்டி பெட்டிகள் ஏற்றி செல்லும் மினி ஆட்டோக்கள் அளவிற்கு அதிகமாக பாரம் ஏற்றிக்கொண்டு திறந்தவெளியாகச் செல்வது தினந்தோறும் வாடிக்கையாகிவிட்டது.

சாலையை அடைத்துக்கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களினால் சிவகாசியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, மற்ற வாகனங்களில் செல்வோர் மீது, குப்பைகள் படர்ந்து மாசு ஏற்படுகிறது. எனவே, விதிமுறைகளை மீறி, போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.