Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆய்வக நிபுணர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஆய்வக நிபுணர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, லேப் டெக்னீசியன் பணியிடத்தை 24 மணி நேர பணியாக அறிவித்து பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.

காலியாக உள்ள நிலை 2 நுட்பனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் பூமிநாதன், மாநில பொதுச் செயலாளர் பாண்டித்துரை, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா, தி ரேடியோலாஜிக்கல் அசிஸ்டண்ட்ஸ் அசோசியேஷன் மாவட்ட செயலாளர் அசோக்குமார் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.