Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வரவு-செலவு திட்டமிடுதல் குறித்து சிவகாசியில் விழிப்புணர்வு பேரணி

சிவகாசி, ஆக. 21: இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் சார்பில் நடந்த இந்த பேரணி காமராஜர் சிலையில் துவங்கி கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி, மேலரதவீதி மற்றும் வடக்கு ரத வீதிகள் வழியாக வந்தது. பேரணியில் பொதுமக்களிடையே நிதி கல்வி, சேமிப்பு, வரவு-செலவு திட்டமிடுதல் மற்றும் புத்திசாலித்தனமான முதலீடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ‘ஒரு கிளை ஒரு கிராமம் முன்னெடுப்பு’ என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெற்ற இந்த பேரணியில் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் ராஜேந்திரன் கலந்து கொண்டார். ஏற்பாடுகளை இந்திய பட்டய கணக்காளர்கள் சிவகாசி கிளையின் தலைவர் அப்துல் அஜீஸ், பொருளாளர் வசந்த், மாணவர்கள் குழு தலைவர் திருக்குமரன் செய்திருந்தனர்.