Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாயுமானவர் திட்டத்தை முறைப்படுத்த கோரி ரேஷன் பணியாளர்கள் பேரணி

விருதுநகர், ஜூலை 21: விருதுநகரில் தாயுமானவர் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் என ரேஷன் கடை பணியாளர்கள் நேற்று பேரணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் விருதுநகர் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு தொடங்கிய பேரணியானது பஜார் நகராட்சி சாலை எம்ஜிஆர் சிலையில் நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகள் கலெக்டர் சுகபுத்ராவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அதில், ரேஷன் கடை மூலம் தாயுமானவர் திட்டம் செயல்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதாவது இந்தத் திட்டத்தை அமுல்படுத்தினால் நடக்க இயலாத வயதானவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை மட்டும் சேர்க்க வேண்டும்.

வாகன வசதி உள்ளவர்கள் வசதியானவர்கள் 100 நாள் வேலைக்கு செல்வோரை இத்திட்டத்திலிருந்து விடுவிக்க வேண்டும். ஒரே குடும்ப அட்டையில் தாயுமானவர் திட்ட பயனாளிகள் இடம் பெற்றால், அந்த குடும்ப அட்டையில் உள்ள பிற நபர்களிடம் பொருட்களை வழங்க உறுதிப்படுத்த வேண்டும். குடும்ப அட்டைதாரர்களின் கைரேகை கருவிழி பதிவு சில நேரங்களில் பதிவாகவில்லை. எனவே கைரேகை கருவிழி பதிவை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.