சிவகாசி, ஆக. 19: சிவகாசி அருகே வீட்டிற்குள் தூங்கிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். சிவகாசி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 50 வயது பெண், தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை 2.30 மணி அளவில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் மகன் மாரீஸ்வரன்(29) என்ற வாலிபர் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரீஸ்வரனை கைது செய்தனர்.
+
Advertisement



