Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

உண்டியலை உடைத்து பணம் திருடியவர்கள் கைது

விருதுநகர், செப்.17: விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியில் உடையார் மூட்டாத்தம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குள், கடந்த 2ம் தேதி, நள்ளிரவில் 2 இளைஞர்கள் கையில் அரிவாளுடன் புகுந்து, உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடி சென்றனர். மேலும் கோயில் பூஜை பொருட்கள் மற்றும் சுவாமி அலங்காரப் பொருட்கள் வைக்கப்பட்ட அறையின் பூட்டை உடைத்து, அதிலிருந்த பூஜை பித்தளை பொருட்களையும் திருடி சென்றனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து சூலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், பிரபாகரன் (19), பிரகாஷ் (27), அங்காள ஈஸ்வரன் (20) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து சூலக்கரை போலீசார் நேற்று 4 பேரையும் கைது செய்தனர்.