Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அருப்புக்கோட்டை ஜிஹெச்சில் காட்சி பொருளாக மாறிய குடிநீர் இயந்திரங்கள்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அருப்புக்கோட்டை, செப்.17: அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில், பழுதாகி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை சீரமைத்து, சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோட்டில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதேபோல அருப்புக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருச்சுழி, பரளச்சி, ரெட்டியபட்டி, நரிக்குடி, வீரசோழன் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து இங்கு பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண்கள் ஏரளாமானோர் வருகின்றனர்.

இந்நிலையில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைை பெரும் இந்த மருத்துவமனையில் சுகாதாரமான குடிநீர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக பொதுமக்களின் வசதிக்காக அரசு மருத்துவமனையில் ஆங்காங்கே குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வசதிகள் ஏற்படுத்தியிருந்தாலும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் செயல்படாமல் உள்ளன. இதனால் இந்த இயந்திரங்கள் காட்சிப் பொருளாகவே காணப்படுகின்றன. பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

மருத்துவமனைக்கு வரும் பொது மக்கள் நோயாளிகள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வெளியே சென்று கடைகளில் ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீர் ரூ.20 கொடுத்து வாங்கி நோயாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். இலவச சிகிச்சை பெற்றாலும் தண்ணீர் தேவைக்காக அதிக பணம் செலவிடும் நிலை உள்ளது. எனவே இந்த குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை சரி செய்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தண்ணீர் தேவை அதிகமாக உள்ளது. இதனால் குடிநீருக்காக பரிதவித்து வருகின்றனர். மருத்துவமனைக்கு வெளியே உள்ள டீக்கடை மற்றும் ஹோட்டல்களில் குடிநீர் வாங்கி பருகுவதால் வேறு ஏதும் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் குடிநீர் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. எனவே குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை சரி செய்து நோயாளிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பாதுகாப்பான குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.