ராஜபாளையம், ஆக.14: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடைபயணத்திற்கு செட்டியார்பட்டியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி அரசரடியில் தேசத்தை பாதுகாப்போம் பாஜ அரசை அகற்றுவோம் என்ற முழக்கத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசம் தழுவிய நடை பயண இயக்கம் வரவேற்பு கூட்டம் நகரச் செயலாளர் அய்யனன் தலைமையில் ஆறுமுகம், ஆண்டி, அழகர் முன்னிலையில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் இராமசாமி சிறப்புரையாற்றினார். ஏஐஒய்எப் மாவட்டச் செயலாளர் பகத்சிங், விதொச மாவட்ட செயலாளர் வரதராஜன், ஒன்றிய பொருளாளர் ஜெயராம், இளைஞர் பெருமன்ற மாரிமுத்து, அமுல்ராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement



