Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

போதை விழிப்புணர்வு பேரணி

சாயல்குடி, ஆக.14: முதுகுளத்தூரில் பள்ளி மாணவர்கள் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இளைய சமுதாயம் போதை பொருள்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தை தொலைக்காமல் தடுப்பதற்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்கள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை முதுகுளத்தூர் டி.எஸ்.பி சண்முகம் துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் சந்தானவேலு தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ். திட்டம் மாவட்ட தொடர்பு அலுவலர் மங்களநாதன் வரவேற்றார். பேரணி காந்தி சிலையில் தொடங்கி பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. இதில் மாணவர்கள் போதை பொருள் ஒழிப்பு பதாகைகளை ஏந்தியும், கோஷமிட்டும் சென்றனர்.

முன்னதாக பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் கஞ்சா மற்றும் நவீன காலத்து போதை பொருட்கள், தீங்கிழைக்கும் உடல்வலி நிவாரணி மருந்து, மாத்திரைகள் போன்ற போதை பொருட்கள் குறித்தும், அவற்றின் தீமைகள், சமுதாயத்தில் நடக்கின்ற குற்றச்செயல்கள், எதிர்காலத்தை பாதிக்கும் அபாயம் குறித்து டிஎஸ்பி சண்முகம் பேசினார்.