Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

சிவகாசி அருகே டிவி சவுண்ட் குறைக்க சொன்ன தந்தைக்கு அடி: மகன் மீது வழக்கு

சிவகாசி, ஜூலை 14: சிவகாசியில் டிவி சவுண்டை குறைக்க சொன்ன தந்தையை தாக்கிய மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி முண்டகன்நாடார் தெருவை சேர்ந்தவர் அச்சக தொழிலாளி சக்திவேல்(50). இவர் தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது மது அருந்திவிட்டு செல்வது வழக்கம் என கூறப்படுகின்றது. சம்பவத்தன்று வழக்கம்போல் மது அருந்திவிட்டு சக்திவேல் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் சத்தமாக டிவி பார்த்துக்கொண்டிருந்த மகன் தமிழ்வேல்(19) என்பவரிடம் டிவி சத்தத்தை குறைத்து வைக்க சொல்லி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தமிழ்வேல் தனது தந்தையை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தந்தை சக்திவேல் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் அவரது மகன் தமிழ்வேல் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.