விருதுநகர், ஆக. 13: விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்த குருவாயூர் எக்ஸ்பிரசில் 1.7 கிலோ மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விருதுநகர் ரயில் நிலையத்திற்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அப்போது காவல் துறையினர் அதில் உள்ள பெட்டிகளில் சோதனை செய்தனர். அதில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சாகர் (42) என்பவர் இருந்தார். அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 1.7 கிலோ இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சாகரைக் கைது செய்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்து உணவுப் பாதுகாப்புத் துறையினரிடம் ஒப்படைத்தனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
+
Advertisement



