விருதுநகர், ஆக. 12: ராஜபாளையத்தில் கடந்த ஜூலை மாதம் கஞ்சா விற்ற சர்க்கரை ராஜ் என்பவரை கலெக்டர் உத்தரவுப்படி போலீசார் குண்டாஸில் நேற்று கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். ராஜபாளையத்தில் கடந்த ஜூலை 18 அன்று சர்க்கரை ராஜ் (38) கஞ்சா விற்பனை செய்தார். இதையடுத்து அவரை ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவர் தொடர்ந்து இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி கவுதம் கோயல், கலெக்டர் சுகபுத்ராவுக்கு பரிந்துரைத்தார். இதனையடுத்து கலெக்டர் உத்தரவுப்படி, சர்க்கரை ராஜை குண்டாசில் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.
+
Advertisement



