Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உதவி பேராசிரியர் பணியிடங்கள் போட்டி தேர்வில் நிரப்பப்படுமா?

விருதுநகர்: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாகும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் பெரும்பாலும் நேரடி நியமனம் மூலமாகவே நடைபெறுகின்றன. அந்தந்த கல்லூரிகளில் காலியாகும் பணியிடங்களுக்கு ஏற்ப நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. சமீப காலங்களில் உதவி பேராசியர் பணியிடங்கள் நியமனத்திற்கு லஞ்சத்தொகைகள் பெற்று ஏமாற்றுவதாக புகார் எழுந்து வருகிறது. எனவே, போட்டித் தேர்வுகள் மூலம் உதவி பேராசியரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து தேர்வர்கள் கூறுகையில், சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிட நியமனம் பெரும் மர்மமாகவே உள்ளது. இதனால் தகுதியானவர்களுக்கு பணிகள் கிடைக்காமல் போகிறது. மாணவர்களுக்கு தகுதியான பேராசிரியர்களும் கிடைக்காமல் போக நேரிடுகிறது. எனவே, இதுபோன்ற குளறுபடிகளை தவிர்க்க உதவி பேராசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் தகுதியானவர்கள் பணியில் சேர வாய்ப்பு ஏற்படும் என தெரிவித்தனர்.