Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் தேரோட்டம்

விருதுநகர், ஏப்.8: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கலை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா மார்ச் 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவினை முன்னிட்டு அம்மன் தினமும் வெள்ளி ரிஷபம், தங்கக் குதிரை, ஊஞ்சல் சேவை, பூப்பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொங்கல் திருவிழா ஏப்ரல் 5ம் தேதி நடைபெற்றது. முக்கிய திருவிழாவான அக்னி சட்டி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்