விழுப்புரத்தில் பட்டப்பகலில் துணிகரம் வீட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு
விழுப்புரம், நவ. 15: வீட்டை உடைத்து 6 பவுன் நகை, வெள்ளி, ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் முகமதுஇப்ராஹிம். இவரது மனைவி அபிதாபேகம். இவர் நேற்றுமுன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்றிருந்தார். பிற்பகல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 6 பவுன் நகை மற்றும் ஒரு வெள்ளி மோதிரம், ரூ.12,050 ரொக்க பணம் ஆகியவை திருடு போயிருந்தது.இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அபிதாபேகம் வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இச்சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, நகை, வெள்ளி, ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பங்கு சந்தையில் முதலீடு செய்து சம்பாதிக்கலாம் என கூறி