Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

புதுச்சேரி, செப். 26: புதுச்சேரி முதலியார்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேல்ராம்பட்டு ஏரிக்கரை அருகே நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் சந்தேகப்படும்படி வந்த வாலிபரை நிறுத்தி ஆவணங்களை கேட்டனர்.

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனை செய்தபோது, கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த ருத்ரகுமார்(23) என்பதும். ஒடிசாவில் இருந்து 2 பேர் கஞ்சா வாங்கி வந்து கொடுத்து, விற்பனை செய்ய சொன்னதாக தெரிவித்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து ருத்ரகுமாரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சா, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். கஞ்சா வாங்கி வந்து விற்க கொடுத்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.