Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விருத்தாசலம் அருகே 6 டன் ரேஷன் அரிசி கடத்தல்

விருத்தாசலம், செப். 26: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் சின்னக்கண்டியன்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வேகமாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 70 மூட்டைகளில் சுமார் 6 டன் எடையுள்ள ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் 6 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தை ஓட்டி வந்த திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா ராசாம்பாளையம் கீழூர் பகுதியை சேர்ந்த சபாபதி மகன் சிவா(32) என்பவரை கைது செய்து விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, இதன் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார் என்பது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மேல் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாலையில் 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.