Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விழுப்புரம் காவல் நிலையம் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

விழுப்புரம், செப். 25: விழுப்புரம் காவல் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் நேற்று காவல்நிலையம் அருகே உள்ள ஜிஆர்பி தெரு பழையகுடோன் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனையிட்டபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணையில் ஜிஆர்பி தெரு ராஜமாணிக்கம் மகன் ரகுபதி(19). அருந்ததியர்தெரு அரிராஜன் மகன் விஷ்ணுவரதன்(18) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.