Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விபத்தில் வாலிபர் பலி

விருத்தாசலம், செப். 25: சிதம்பரம் தாலுகா, அண்ணாமலை நகர் பழனியப்பா நகரைச் சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன். இவரது மகன் சசிகுமார் (24). இவர் நேற்று பைக்கில் திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது திட்டக்குடி - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் பெண்ணாடம் மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, எதிரே வந்த மினி லாரிமோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சசிகுமார் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சசிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.