Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விழுப்புரம் அருகே வீடு புகுந்து பணம், வெள்ளி திருட்டு

விழுப்புரம், மே 25: விழுப்புரம் அருகே வீடு புகுந்து ரொக்க பணம், வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே பனங்குப்பத்தைச் சேர்ந்தவர் சங்கர்(44). இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் மாமியார் வீட்டிற்கு சென்ற நிலையில் நேற்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்ககதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்க பணம், 30 கிராம் வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.