Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கடலூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர், செப். 23: கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதிகளில் புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கையாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூரில் பல மாதங்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மாலையில் மழை பெய்து வருகிறது. காலை முதல் மதியம் வரை வெயில் சுட்டெரித்த போதிலும் மாலையில் இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதன் மூலம் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.