உளுந்தூர்பேட்டை, செப். 23: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தில் உள்ள சிவன் கோயில் குருக்களாக இருந்தவர் சுப்ரமணியன் மகன் கிருஷ்ணமூர்த்தி(59). இவர் தனது மனைவி இந்திரா, மகன் சிவகுரு ஆகியோருடன் சிவன் கோயில் வளாகத்தில் உள்ள வீட்டில் தங்கி கோயிலுக்கு பூஜை செய்து பராமரித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை 3 மணிக்கு கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் காணவில்லை என மனைவி உள்ளிட்டவர்கள் தேடியபோது கோயில் வளாகத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உளுந்தூர்பேட்டை காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.


