Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கணவருடன் செல்ல முயன்றதால் ஆத்திரம்; பெண்ணின் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதலன்: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி, ஆக. 13: கள்ளக்குறிச்சியில் கணவனை விட்டு பிரிந்து வந்த பெண், மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ முயன்றபோது, இடையூறாக இருந்த கள்ளக்காதலன், அந்த பெண்ணின் கழுத்தை அறுத்ததுடன், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் புத்தூர்புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல்(42) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கவிதாவுக்கும்(38) கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த சகாதேவன் (44) என்பவருடன் கவிதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி கொண்டதால் கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி அறிந்ததும் சக்திவேல் தனது மனைவி கவிதாவை கண்டித்துள்ளார். இந்நிலையில் கணவரிடம் கோபித்து கொண்டு கவிதா 2 குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறினார்.

பின்னர் கள்ளக்காதலனுடன் இரண்டு குழந்தையையும் கவிதா அழைத்து கொண்டு கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதிக்கு வந்து அங்கு ஒரு வாடகை வீட்டில் கடந்த 6 மாதங்களாக வசித்து வந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கவிதாவின் கணவர் சக்திவேல் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதிக்கு வந்து கவிதாவை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட கவிதா தனது கணவருடன் செல்ல முயன்றார். ஆனால் அதற்கு கள்ளக்காதலன் சகாதேவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கள்ளக்காதலன் சகாதேவனுக்கும் கவிதாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இரண்டு குழந்தையும் அழைத்துக்கொண்டு தனது கணவர் சக்திவேலுடன் செல்ல கவிதா தனது பொருட்களை எடுத்துக்கொண்டு தயாராகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சகாதேவன் தன்னைவிட்டு செல்லக்கூடாது என கூறி கவிதாவை மிரட்டியுள்ளார். அதனையும் மீறி கவிதா தனது கணவருடன் செல்ல முயன்றபோது கவிதாவின் கழுத்தை பிளேடால் சகாதேவன் அறுத்துவிட்டு தனது கழுத்தையும் பிளேடால் அறுத்துக்கொண்டுள்ளார்.

இருவர் கழுத்தில் இருந்து அதிகபடியான ரத்தம் வெளியேறியதை பார்த்த சக்திவேல் மற்றும் அவரது உறவினர்கள் உடனடியாக இருவரையும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கவிதா கள்ளக்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்காதலன் சகாதேவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்னையால் பிரிந்து இருந்த மனைவி 6 மாதங்களுக்கு பிறகு தனது கணவருடன் செல்ல முயன்றயதை தடுத்து கழுத்தை அறுத்து கள்ளக்காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.