Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பள்ளி மாணவர்களுக்கு சிகரெட் விற்ற முதியவர் கைது: கடை உரிமையாளர் மீது வழக்கு

விருத்தாசலம், ஆக. 13: விருத்தாசலம் பாலக்கரை பகுதியிலிருந்து ஆற்றுப்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள பெட்டிக்கடையில், பள்ளி மாணவர்களுக்கு சட்டவிரோதமாக சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக விருத்தாசலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில், மாணவர்களுக்கு சிகரெட் விற்பனையில் ஈடுபட்டது உறுதியானதையடுத்து, எருமனூர் புதுக்காலனி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (67) என்பவரை கைது செய்தனர். மேலும், இந்த சட்டவிரோத விற்பனைக்கு உடந்தையாக இருந்த பெட்டிக்கடையின் உரிமையாளர் சேட்டுபாய் என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.