விழுப்புரம், அக். 2:விழுப்புரம் அருகே வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் குமாரக்குப்பத்தை சேர்ந்த மாணவருக்கும், நரையூரை சேர்ந்த மாணவருக்கும் இடையே இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் யார் கெத்து என்று பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் நரையூரை சேர்ந்த மாணவரின் நண்பர்கள் 4 பேர், நேற்றுமுன்தினம் இரவு வளவனூர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த குமாரக்குப்பம் மாணவரை வழிமறித்து சரமாரியாக தாக்கியதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து நரையூரை சேர்ந்த 4 பேர் மீது வளவனூர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், இந்த பிரச்னை தொடர்பாக குமாரக்குப்பம் பகுதியை சேர்ந்த மற்றொரு பிளஸ் 2 மாணவரை, நரையூர் பகுதியை சேர்ந்த 4 பேர் தடியால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் அங்குள்ள அரசு மருத்துவமனயைில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்தும் வளவனூர் காவல் நிலைய போலீசார் நரையூரை சேர்ந்த மேலும் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

