Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கருவேப்பிலங்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள பெலாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன். இவரது மகன் அறிவழகன் (46). இவர் தனது குடும்பத்தினருடன் பெண்ணாடத்தில் வசித்து வருகிறார். பெலாந்துறையில் உள்ள பூர்வீக வீட்டில் முதியவரான ராமநாதன் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராமநாதன் வீட்டைப் பூட்டிவிட்டு, அருகிலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று அங்கேயே தங்கியுள்ளார். நேற்று காலை வழக்கம்போல் வீட்டிற்குத் திரும்பியபோது, வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.12 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் இரண்டு வெள்ளி விளக்குகளை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ராமநாதன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.