Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருக்கோவிலூர் அருகே மருத்துவமனைக்கு சீல் வைப்பு 2 போலி மருத்துவருக்கு வலை

திருக்கோவிலூர், அக். 30: திருக்கோவிலூர் அருகே உரிய மருத்துவப் படிப்பு முடிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை பகுதியில் சிலர் உரிய மருத்துவப் படிப்பை முடிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல உதவி மருத்துவர் ஜெயசூர்யா தலைமையிலான மருத்துவக் குழுவினர், சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு மருத்துவப் படிப்பை முறையாக முடிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு மருத்துவக் குழுவினர் நேற்று சீல் வைத்தனர். மேலும், அங்கு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மருந்துகள் 17 பெட்டிகள் மற்றும் ஊசிகள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மருத்துவ அலுவலர் ஜெயசூர்யா அளித்த புகாரின்பேரில் போலி மருத்துவர்கள் சிவராஜ் மற்றும் ஞானாம்பிகா ஆகியோர் மீது மணலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் மணலூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.