Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விருத்தாசலத்தில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 12 பவுன் திருட்டு

விருத்தாசலம், அக். 29: விருத்தாசலம் அருகே அரசு பஸ்சில் பயணம் செய்த மூதாட்டியிடம் 12 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை ஒத்தக்கடை தெருவைச் சேர்ந்தவர் சுகுமாரன் (75). இவரது மனைவி பிரேமா (70). இத்தம்பதியினர் தங்களது உறவினர் ஒருவரின் 60-வது திருமண விழாவில் பங்கேற்பதற்காக விருத்தாசலம் கடைவீதிக்கு வருமாறு உறவினர்கள் அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் தம்பதியினர் இருவரும் மங்கலம்பேட்டையில் இருந்து அரசு பஸ் ஏறி விருத்தாசலம் வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து மற்றொரு டவுன் பஸ்சில் ஏறி விருத்தாசலம் கடைவீதிக்கு வந்தனர். கடைவீதியில் இறங்கியதும் பிரேமா தனது கையில் வைத்திருந்த கைப்பையை திறந்து பார்த்துள்ளார். அப்போது, பையின் உள்ளே வைத்திருந்த 12 பவுன் மாயமாகி இருப்பதை கண்டு கூச்சலிட்டு கதறினார். பஸ்சில் வந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகையை அபேஸ் செய்திருக்கலாம் என தெரிகிறது.

இதுகுறித்து புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மூதாட்டி நகைகளை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டாரா? அல்லது அரசு பஸ்சில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் நைசாக கைவரிசை காட்டினரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.