உளுந்தூர்பேட்டை, செப். 28: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது டி. மாவிடந்தல் கிராமம். நேற்று இக்கிராமத்தில் தேசிய ெநடுஞ்சாலையில் சிதறிக்கிடந்த 500 ரூபாய் நோட்டுக்களை பார்த்து ஆச்சரியப்பட்ட அந்த வழியாக சென்றவர்கள் அதனை சேகரித்தனர்.
ஆனால் அதனை எடுத்து பார்த்தவர்கள் அந்த 500 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் அசல் ரூபாய் நோட்டுகள் இல்லை என தெரிந்தது. பிளாஸ்டிக் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுகள் ேபால் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த ரூபாய் தாள்களில் எண் இல்லாமல் இருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக ரூபாய் நோட்டுக்களை போட்டுவிட்டு சென்றனரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து எடைக்கல் காவல் நிலைய போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

