Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சிறுவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

புதுச்சேரி, செப். 28: புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோபாலன் கடை பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அம்மா நகர் பகுதியில் ஆசாமிகள் சிலர், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கு சந்தேகம்படும்படி நின்றிருந்த 4 பேர் போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.அதில் கோபாலன்கடையை சேர்ந்த அஞ்சுக பிரகாஷ்குமார், பொறையூரை சேர்ந்த கலா (எ) அருண் (எ) அருண்குமார் (27), சரண் (எ) சரண்ராஜ், ராமன் (21) என்பதும், அப்பகுதியில் உள்ள சிறுவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில் போலீசிடம் இருந்து அஞ்சுக பிரகாஷ்குமார் தப்பி செல்ல முயன்றபோது, தவறி கீழே விழுந்ததில் அவரது கையில் முறிவு ஏற்பட்டது.