Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

உளுந்தூர்பேட்டை அருகே கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

உளுந்தூர்பேட்டை, செப். 18: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் வரதராஜன்(45). விவசாய கூலி தொழிலாளி. திருமணம் ஆகாத இவர் அதிக குடிப்பழக்கம் உள்ளவர் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவர் பாலத்தின் கட்டையில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது திடீரென கால்வாயில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு ெசன்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.