Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பாலியல் சீண்டல் பள்ளி மாணவி விஷம் குடிப்பு போக்சோவில் ஆசிரியர் கைது

சின்னசேலம், செப். 11: அரசு பள்ளி மாணவி விஷம் குடித்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தெங்கியாநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் அறிவியல் ஆசிரியர் ஜெகதீசன்(46) என்பவர் பாலியல் அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த மாணவி 7ம் தேதி காலை விஷம் குடித்துவிட்டு வீட்டில் படுத்திருந்தார். அப்போது அவரது பெற்றோர் பள்ளிக்கு போகவில்லையா என்று கேட்டபோது, பள்ளியில் நடந்த சம்பவத்தை கூறி விஷம் குடித்துவிட்டதாக கூறி உள்ளார்.

இதையடுத்து அந்த மாணவியை அவரது பெற்றோர் சின்னசேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்து பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அந்த மாணவியின் உடல்நிலை அபாயகரமான நிலையில் உள்ளதாக தெரிகிறது. இது குறித்து அந்த மாணவியின் வாக்குமூலத்தின்பேரில் மாவட்ட எஸ்பி ஷஹ்னாஸ், கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஆகியோர் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஜெகதீசன் மற்றும் சக ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் ஆசிரியர் ஜெகதீசனை கச்சிராயபாளையம் போலீசார் போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.