Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நெல்லிக்குப்பம் அருகே எம். சாண்ட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

நெல்லிக்குப்பம், செப். 9: கடலூர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பெர்னார்ட் நேற்று முன்தினம் கடலூர்-பாலூர் நெடுஞ்சாலையில் பில்லாலி தொட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில் விழுப்புரம் மாவட்டம் தென் சிறுவலூர் பகுதியைச் சேர்ந்த தேவராசு மகன் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான லாரி என்பதும், வானூர் கேணிப்பட்டு பகுதியைச் சேர்ந்த துரை மகன் விமல்ராஜ் என்பவர் ஓட்டி வந்ததும் தெரிய வந்தது.

பின்னர் லாரியை சோதனை செய்ததில் 3 யூனிட் எம்.சாண்ட் இருந்தது தெரிய வந்தது. மேலும் ஓட்டுநரிடம் இருந்த அனுமதி சீட்டு முறைகேடானது என தெரிய வந்தது. இதை தொடர்ந்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்து நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.