Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யாருடன் கூட்டணி? நாளை அறிவிக்கிறார் ராமதாஸ்

திண்டிவனம்: யாருடன் கூட்டணி என்பது குறித்து நிர்வாகிகள் கூட்டத்துக்கு பிறகு பாமக நிறுவனர் ராமதாஸ் நாளை (மார்ச் 3) அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்திய நிலையில், செவ்வாய்க்கிழமை நாளை காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்கம், மகளிர் சங்கம், மாணவர் சங்கம், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, மாநகர, பகுதி நிர்வாகிகள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.

இதில் ராமதாஸ் நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து கருத்து கேட்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி 28க்கு முன் கூட்டணி குறித்து அறிவிப்பேன், திராவிட கட்சியுடன் இருக்கும் என்று கூறினார். ஆனால் இதுவரை எந்த தகவலும் வெளி வராத நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். பேரூர், நகர, ஒன்றிய அளவில் உள்ள நிர்வாகிகள் கூட்டத்துக்கு ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளதால் கூட்டணி குறித்து நாளை(மார்ச் 3) அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.