Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தனியார் பள்ளி மாணவன் கடத்தலா?

புதுச்சேரி, பிப். 27: புதுச்சேரி முருங்கப்பாக்கம் வில்லியனூர் சாலை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன், வேல்ராம்பேட் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி மாணவன் மற்றும் அவரது பெற்றோர் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கினர். பின்னர், மறுநாள் காலையில் மாணவனின் பெற்றோர் எழுந்து பார்த்தபோது, மாணவன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், வீட்டிலிருந்த பைக்கையும் எடுத்து சென்று இருப்பது தெரியவந்தது. உடனே, அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது நண்பர்களின் வீடுகளில் சென்று விசாரித்தபோது மாணவன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, மாணவனின் பெற்றோர் முதலியார்பேட்டை போலீசார் கடத்தல் வழக்கு பதிந்து மாணவனை தேடி வருகின்றனர்.